Price: ₹40
Pages: 80
ISBN: 8190722557
“பழம் பெரும் உரையாசிரியரான பரிமேலழகர் உரைதான் இன்றுவரை நோக்கீட்டு உரையாக சொல்லப்படுகிறது. அவ்வாறான கருத்துகளை புறந்தள்ளுகிறார் நாமக்கல் கவிஞர். பரிமேலழகர் உரை என்பது திருவள்ளுவர் எண்ணிச் செய்யாததும், வலிந்து மேற்கொள்ளப் பட்டதுமாகும் என்று ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துக் காட்டுகளுடன் ஆராய்ந்துள்ளார் கவிஞர். எந்த ஓர் உரையும் மூலத்தை நேர்பட விளக்க வேண்டும். தமது சொந்தச் சிந்தனைகளுக்கு அதில் இடம் அளிக்கலாகாது என்பதே நாமக்கல் கவிஞரின் வாதம். இது சரியெனவே தோன்றுகிறது, இப்படி முத்தாய்ப்பான பதிப்புக் குறிப்புடன்; 1954ம் ஆண்டு வெளிவந்த நூலை மறுபதிப்பு செய்துள்ள அலைகள் வெளியீட்டகத்துக்கு பாராட்டுகள். திருக்குறள் பற்றி நாள்தோறும் புதுப் புது உரைகள் தோன்றும் காலத்தில்; ஒட்டுமொத்தப் பின்னணியோடு பார்க்க வழிகாட்டும் இந்நூல் மிக முக்கியமானது.