Price: ₹50
Pages: 188
ISBN: --
சுகி.சிவம் நாடறிந்த நல்லறிஞர் .ஆன்மிக இலக்கியத்தில் மூழ்கித் திளைத்த நன்முத்து. குருமகா சன்னிதானம் அருள்நெறித் தந்தையெனும் ஞானப்பல்கலை கழகத்தில் வளர்ந்த ஞான நாற்று. தமிழகச் சமய உலகத்தில் புத்தெழுச்சியை ஏற்படுத்திய அருள்நெறித் தந்தை எனும் ஆன்மிக வேள்வியில் இருந்து புறப்பட்ட ஞானச்சுடர் சுகி.சிவம். அவர்தம் பல்வேறு சிந்தனைகளின் ஞானப்பிழிவாய் அமைந்த சொற்பொழிவுகளின் தொகுப்பாய் அமைந்த இந்நூல் கற்கும் தோறும், கற்கும் தோறும் புதுமை தருகின்றது. மரபு மாறாத பழமையும் வளம் குறையாத புதுமையும் பின்னிப் பிணைந்து இளைய தலைமுறைக்கு முழுமையும் பயன்தரும் வகையில் நூல் அமைந்துள்ளது.