Price: ₹295
Pages: 336
ISBN: -
தென் தமிழகம் பாசமும் வீரமுமான பூமி என்பது மறுக்க முடியாத உண்மை . அதிலும் மதுரையும் அது சார்ந்த சுற்றுப் பகுதிகளும் கேந்திரம் அல்லவா ? இந்த நாவலின் கதைக் களம் மதுரைதான் . " சேகரன் " கதையின் நாயகன் . ஒரு புகழ்மிகு ஜமீன் வழி வந்தவன் - என்றாலும் நவீன வாழ்க்கை முறைக்கேற்ப அவன் ஒரு கல்லூரி ஆசிரியனாய் கதையினில் உள்ளான் . அவனின் அன்பு மனைவி சிவசக்தி ஆசை மகன் சதீசுமான அவன் வாழ்விலும் , அவனின் மதிப்பிற்கும் பாசத்திற்குமான மாமா மாறவர்மன் , அத்தை செல்லம்மா வாழ்விலும் விதி வழி வந்த சோதனைகளும் , போராட்டங்களும் கதையின் கரு என்றால் , கதையின் இரு நாயகிகளான கங்கா மற்றும் சுமதியின் மர்மங்கள் நிறைந்த வாழ்வு கதையின் உயிர் துடிப்பு . கதை பற்றி இப்படி ஒரு வரியில் சொல்வது தானே உத்தமம் . விரிவாகச் சொல்லிவிட்டால் இரகசியங்கள் வெளிப்பட்டு படித்தலின் சுவை குறைந்து விடக் கூடாதல்லவா ? கதையை உண்மையென்று நினைத்து