Loading…

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
Author: அம்பை Ambai

Price: ₹195

Pages: 168

ISBN: 9789388631143

அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் இவர். பொதுவாக அங்கீகாரம் குறித்தோ பேட்டிகள், விருதுகள் குறித்தோ கவலைப்படாதவர் அம்பை. அம்பைக்கு முன்னும் பின்னும் பெண்கள் பலர் எழுதாமல் இல்லை. ஆனால், அம்பை எல்லாவற்றிலுமிருந்து விலகித் தனித்துவப் பாதையைத் தேர்ந்துகொண்டவர். பெண்களைப் பற்றியும் குடும்பத்துக்குள் பெண்களின் இருப்புப் பற்றியும் சிலர் எழுதிக் கடந்த நிலையில் அம்பையும் அதைத்தான் கைகொண்டார். ஆனால், பார்வை வேறு; கோணம் வேறு. சமூகக் கருத்துகள் நிறைந்த எழுத்து என்கிற முத்திரை எதையும் அவர் எழுத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டவோ கோரவோ இல்லை. ஆனால், கதைக்குள்ளும் அதைக் கட்டமைக்கும் சொற்களுக்குள்ளும் அந்த வித்தையை நேர்த்தியாகச் செயல்படுத்தினார். அறுபதுகளின் பின்பகுதியில் பெண்களுக்குப் பளீரென்ற விடியல் வாய்த்துவிடவில்லை. சமையல் குறிப்புகளை எழுதுவதும் குடும்பச் சித்திரங்களை வாசிப்பதும் பெரும் சாதனையாகக் கருதப்பட வேண்டிய சூழலில்தான் சி.எஸ். லஷ்மி, அம்பையாக மாறிய வெளிப்பாடு நிகழ்ந்தது. குடும்பச் சித்திரங்களுக்குள் புதைந்திருந்த பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியவர்களும் அதில் மீறலை நிகழ்த்தியவர்களும் உண்டுதான் என்கிறபோதும் நவீன இலக்கியத்தில் அம்பை நிகழ்த்திய உடைப்பு முக்கியமானது.

Goodreads reviews for சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை