Price: ₹670
Pages: 661
ISBN: ----
இந்தியத் தத்துவச் சிந்தனையாளர் மரபில் பரமஹம்ச பேரொளியையும் விவேகானந்த ஞான தீபத்தையும் தமிழ் மண்ணில் ஏந்தி வளர்த்தவர் வணக்கத்துக்குரிய பெரிய ஸ்வாமிகள் சித்பவானந்தரே ஆவார். ஞானக்கடல் ஸ்வாமிகள் பிறந்த போது பாரதத் திருநாடு அடிமைத் தளையில் சிக்கிக் கிடந்தது. ஆங்கில வழிக் கல்வி பயின்று ஆங்கிலேயர் நாட்டில் மேற்கல்வி பயில அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்த சூழலில் அதனை மறுத்து சென்னை மாநிலக் கல்லூரியில் கல்வி பயில முடிவெடுத்ததும் இளம் பருவத்து சுவாமிகளே ஆவார். சென்னையில் விவேகானந்தரின் சொற்பொழிவு தொகுப்பு ஒன்றை படிக்க நேர்ந்த கணம் இளம் சின்னுவிடம் ஒரு புதிய பரிணாமம் விழைந்தது- அதே சமயம் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் பரமஹம்சரின் நேர் சீடர்களான ப்ரஹ்மானந்த மஹராஜ், சிவானந்த மஹராஜ் இருவரும் இருப்பதை அறிந்து அடிக்கடி அங்கே சென்ற "சின்னு" புதுப் பிறவி எடுத்தார். பட்டப்படிப்பை முதல் ஆண்டிலேயே கைவிட்டு அன்றைய கல்கத்தா ராமகிருஷ்ணர் திருமடத்திற்கு செல்ல அவரே முடிவெடுத்தார்.