Price: ₹23
Pages: 132
ISBN: ----
தமிழறிஞர்களில் மூத்த மேதையான பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீனாக்ஷிசுந்தரனார் 1901-ஆம் ஆண்டில் பிறந்தார் .வரலாறு,அரசியல்,பொருளாதாரம்,சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்ற இவர் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார் .மகாத்மா காந்தியடிகளின் சீடர்.ராஜாஜி,ஈ.வே.ரா,பெரியார்,கே.காமராஜ்,எமனோ,பர்ரோ,காத்ரே முதலிய மேதைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர் ,தென்னகத்தில் ஒப்பிலக்கியத் துறைக்கு தெ.பொ.மீ.வித்திட்டார் .தமிழ் இலக்கியத் திறனாய்வை அனைத்துலகத் தரத்திற்கு உயர்த்தினார்.தமிழ்,வடமொழி,ஆங்கிலம்,பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் அறிஞரான இவர் 'பன்மொழிப் புலவர்'எனப் பாராட்டப்படுகிறார் ,மொழியில் சமயம்,தத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் மேதையான இவர் 'பல்கலை செல்வர்' எனப் பட்டம் பெற்றார்.