Price: ₹100
Pages: 240
ISBN: ----
நான் ஒரு வழியை சோதனை செய்து கொண்டு இருக்கிறேன். அஹிம்சையை பற்றி ஆராய்வது என்னுடைய வாழ்க்கைப் பணியாக இருந்து வருகிறது. நான் தொடங்கிய ஒவ்வொரு செயலும், மேற்கொண்ட ஒவ்வொரு பணியும் அந்த ஒரு சோதனைக்காகவே நடைபெற்றன. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அஹிம்சையின் முழுமையான ஆராய்ச்சிக்காக உண்மையில் உடம்பையே விட்டுவிட வேண்டும். அந்த நிலை கைகூடாத வரைக்கும் முடிந்த அளவு உடம்பில் இருந்தும் நிறுவனங்களில் இருந்தும் பணத்தில் இருந்தும் தனித்திருந்து பணி செய்வதே என்னுடைய போக்காக இருந்திருக்கிறது. சமூக வாழ்வில் அஹிம்சை எங்ஙனம் பெருமைக்குரிய இடம் பெற்று நிலைபெறும் என்ற சோதனை தான் அது.