Price: ₹40
Pages: 72
ISBN: ----
அண்மைக்கால இந்திய வரலாற்றில் முக்கியமான நூலான "சாதி அழித்தொழிப்பு " பலமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் அந்த மூல நூலுடன் அம்பேத்கர்- காந்தி கருத்துப் பரிமாற்றங்கள் இணைக்கப்பட்டு வெளிவரும். மார்ச் 2014ல் நவாயானா டெல்லியில் புதிய பதிப்பை வெளிக் கொண்டு வந்தது. இப்புதிய பதிப்பில் Annihilation of Caste-க்கு முன்னுரையாக அருந்ததிராய் எழுதிய 153 பக்க "The Doctor and the Saint" (முனைவரும் புனிதரும்) எனும் பகுதி இடம் பெற்று உள்ளது. அருந்ததிராயின் கட்டுரை, அம்பேத்கரின் அற்புதமான ஆற்றப்படாத உரைக்கான அறிமுக குறிப்பு என்று முன் வைக்கப்பட்டுள்ளது. இச்சிறு நூல் அருந்ததிராயின் "முனைவரும் புனிதரும்" குறிப்புக்கான எதிர்வினை தான். ஆயினும், நம் காலத்திற்கு வெகு முன்னர் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க அம்பேத்கர்-காந்தி விவாதத்துடன் மறைமுகமாக தொடர்புடையது. அவர்களுக்கு இடையிலான கருத்து பரிமாற்றங்கள் இரண்டு சக்தி வாய்ந்த வரலாற்று ஆளுமைகளை புரிந்துகொள்ள உதவுவது மட்டுமின்றி, இந்திய சமூகத்தில் இன்றும் தொடரும் போதாமைகளையும், தேசிய விடுதலை மற்றும் சமூக நீதி ஆகிய இரண்டு இலக்குகளுக்கு இடையில் 20ம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் இருந்த முரண்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது.