Price: ₹110
Pages: 184
ISBN: -
கி.மு.620-ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்த ஈசாப் என்பவர் கி.மு.564ம் ஆண்டு வரை அடிமையாக இருந்தே தனது வாழ்க்கையை கழித்தவர். தத்துவ ஞானியாகவும் விளங்கினார். கிரேக்க நீதிக் கதைகளின் தொகுப்பின் ஆசிரியராகக் கருதப்படுபவர். அவரது கதைகள் உலகப் புகழும் பேரும் பெற்றவை. விலங்குகளை மையமாகக் கொண்டு நீதிக்கதைகள் சொல்வதுடன்¸ மனிதர்களிடையே நிகழும் சமூக பரிவர்த்தனையை வலியுறுத்துவதுடன்¸ வாழ்க்கையில் போட்டி மிக்க எதார்த்த அம்சங்களுக்கு எவ்வாறு ஈடுகொடுப்பதற்கான அறிவுரைகளையும் கூறுகின்றன. உலகம் முழுவதும் ஓர் குடும்பம் போல் இருக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் அன்பே ஆதாரமாய் இருத்தல் வேண்டும் என்ற முக்கியத்துவத்தில்¸ நமது குழந்தைகள்¸ நம் நாட்டு வாழ்க்கையையும்¸ பிற நாட்டு வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்வதுடன் அனைவரிடத்திலும் நட்புணர்வோடு பழகுதல் முதலிய கருத்துகளை வலியுறுத்தும் ஈசாப் கதைகள்.