Price: ₹70
Pages: 200
ISBN: ----
'கரிசக்காட்டு கனவுப்பெண்ணே' இந்நாவலைப் பற்றி யூகிப்பதற்குக்கூட இடம் தராமல் தலைப்பிலேயே கிராமப்பின்னணி ஒட்டிக்கொண்டது. இந்நாவலில் கிராமங்களின் வழக்கச் சொற்கள், நடைமுறைப் பழக்க வழக்கங்கள் இக்கதையைத் தழுவியதுடன், புரிதலில் எளிமையான நடையில் படைக்கப்பட்டுள்ளது. கரிசக்காட்டில் பிறந்தவர்கள் எல்லாம் அறிஞராக, கலைஞனாக, விஞ்ஞானியாக, நடிகனாக, சாதனையாளனாக கனவு காண்பதில்லையா...? அது போல் இக்கதையின் நாயகியும் கனவு காண்கிறாள். அது...எழுத்தாளராய் தன்னை உயர்த்திக்கொள்ளும் கனவு. முயற்சிகளுக்கு தடைகள் என்பது வெறும் (வெற்றியின்) படிக்கற்கள்தான். ஆனால், நாயகிக்கு தடைகளுடன் சோதனைகளும், வேதனைகளும் கூடவே ஆறாத ரணத்துடன் தன் கனவை எட்டிப் பிடிக்கிறாள். அவளின் எல்லா முயற்சிகளுக்கும் தோழி, நிழலாய் மாறி தோள் கொடுக்கிறாள். இந்த நாவலைப் படிக்கும்போது, வயக்காட்டு ஈரமான புல்வெளிகளுக்கு மத்தியில் அமர்ந்து, இயற்கைக்காற்றை சுவாசித்துக்கொண்டே கட்டுச்சோற்றை ஊறுகாய், வடகத்தோடு தின்று, ஜில்லென்ற வாய்க்கால் நீரில் கால் நனைத்த திருப்தி ஏற்படும்.