Price: ₹110
Pages: 176
ISBN: ----
கோழைகளைப் பயத்தினாலும், தைரியசாலிகளை தந்திரத்தாலும், பேராசைக்காரர்களைப் பொருளினாலும் வெல்ல வேண்டும். அந்த வகையில், உங்களுடைய நிர்வாகத்தில் அப்படிப்பட்ட நபர்களை வீழ்த்தி, நீங்கள் ஒரு சிறந்த நிர்வாகி ஆக, மஹாபாரதம் தரும் சக்ஸஸ் :.பார்முலாக்களின் தொகுப்பு இந்தப் புத்தகம். மேலாண்மை என்றாலே யாரோ அயல் நாட்டவர் சொன்ன கருத்துக்கள்தான் நம் நினைவுக்கு வரும். வாயில் நுழையாத பெயர்களைப் படித்து, மார்க் வாங்க மட்டுமே உதவும் கருத்துகளாகவே அவை இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு போர்க்களத்துக்குப் போவது போல், இனி ஆபீஸ் போக வேண்டியிருக்காது. உருட்டுக்கட்டையுடன் உங்களுக்காக யாரும் அங்கே காத்திருக்கமாட்டார்கள். அடுத்தவரை சமாளிப்பது எப்படி? போட்டுக் கொடுப்பவரை சமாளிப்பது எப்படி? போன்ற கேள்விகளுக்கெல்லாம் மஹாபாரதக் கதைகள் நமக்குத் பதிலளிக்கின்றன. இவை யாரோ சொன்ன குருட்டுப்பாடமாக இருக்காது. துரியோதனன், சகுனி, கிருஷ்ணர் போன்றவர்களே நமக்குச் சொல்லித் தரப் போகிறார்கள். இவை, நீங்களே புரிந்துகொள்ளக் கூடிய நடைமுறை மேலாண்மைத் தத்துவங்களாக இருக்கும். கூடவே, குட்டிக்கதைகள் ஒரு பூங்கொத்தாகக் காத்திருக்கின்றன.