Price: ₹140
Pages: 272
ISBN: ----
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரையிலான தமிழக வரலாறும் பண்பாடும் பற்றி முழுமையாக - அனைத்துக் கோணங்களிலும் - விளக்க இந்நூல் முயன்றுள்ளது. வரலாற்றின் அங்கங்களாகிய அரசியல், சமுதாயம், சமயம், கலை, இலக்கியம் ஆகியன காலவாரியாக தனித்தனியே இங்குத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரையின் முன்னுரையிலும் தலைப்புப் பற்றிய விளக்கம் அல்லது அதன் முக்கியத்துவம், அதன் பின்புலம் பற்றிய பொதுப்பார்வை, ஆய்வு மூலங்கள், அதைப்பற்றி ஆய்வு செய்தோர் ஆகிய செய்திகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பின் இறுதியிலும் எளிமையும் தெளிவும் கலந்த ஆய்வு முடிவுகள் நிரல்படுத்தப்-பட்டுள்ளன. நூல் முழுவதும் ஆற்றொழுக்கான இனிய நடை பின்பற்றப்பட்டுள்ளது. இவை இந்நூலின் தனித்தன்மைகள். தமிழையும், வரலாற்றையும் சிறப்புப் பாடமாகக் கொண்டு படிக்கும் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும், தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் ஆன்றோர்க்கும் மட்டுமின்றித் தமிழக வரலாறும் பண்பாடும் பற்றி அறிய விரும்பும் அனைவர்க்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.