Price: ₹50
Pages: 107
ISBN: ----
மக்களாட்சியில் நம் தலைவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை, நம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு நீதி விசாரணையின் போது, நம் காழ்ப்புணர்வு அரசியல் என்பது எந்த அளவுக்கு மக்களாட்சியை தாழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதனை விளக்கியுள்ளார். பேராசிரியர் க.பழனித்துரை அவர்கள் எழுதியுள்ள 'மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல்' என்ற இந்த நூலில், நமது நாட்டில் நடைபெற்று வரும் ஜனநாயகத்தை உற்று நோக்கி அதிலுள்ள குறைபாடுகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். அரசியல்வாதிகளால் ஜனநாயகம் என்பது தேர்தல் மாத்திரம் என்ற நிலைக்கு தாழ்ந்துவிட்டது. அதிகார மையங்கள் எவ்வளவுக்-கெவ்வளவு பல்வேறு வகைகளில் பரவல் முறையில் இருக்கிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் உறுதிப்படும் என்றும் விளக்குகிறார்.