Price: ₹90
Pages: 264
ISBN: ----
உலகம் உருண்டை அதனால் தான் சந்தித்தவர்களையே மீண்டும் சந்தித்துக் கொள்கிறோம் என்பதான பழமொழியை கமலவல்லி கல்லூரியில் கேட்டிருக்கிறேன். ஆனால், நாமக்கல் டவுன் உருண்டையா என்று தெரியவில்லை. இன்று காலையிலிருந்து பிற்பகலுக்குள் ஏழாவது முறையாக இந்த மனிதனை சந்தித்தற்கு அர்த்தம் இந்த பழமொழியா என்று தெரியவில்லை. காலையில் வாசல் தெளிக்க போனபோது கொஞ்சம் கூடுதலான சத்தத்துடன் ஒரு மொபெட் தாண்டிப் போயிற்று. இருள் பிரியும் நேரத்தில் இந்த மனிதன் மின்விளக்கு எரிய பின்னே நிழலுருவாய் உட்கார்ந்து கொண்டு போனான். காய்கறிக்கு தெருமுனை கடைக்குப் போகும்போது காலையில் போன அதே வேகத்திலேயே திரும்ப வந்தான்............