Price: ₹100
Pages: 166
ISBN: ----
'மூன்று உலகம்' 'மூன்று தெய்வீகம்' 'மூன்று தோஷம்' 'முக்குணம்' இப்படி மூன்று மூன்றாகப் பகுத்துப் பேசுவது பண்டு தொட்டுப் பாரத மரபு; அடிப்படைக்கு கோட்பாடு. தற்கால அரசியலிலும், 'மூன்றாம் உலகம்' என்று ஒன்றைக் குறிப்பிடுகிறோம். அமெரிக்கா மற்றும் இரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு அப்பாலிருந்து இயங்கும் பகுதி 'மூன்றாம் உலகம்' எனப் படுகிறது. அவ்வண்ணமே, நாம் கொண்டுள்ள 'மூன்றாம் சக்தி' என்ற கருத்தோட்டமும். அது உலக அமைதியை உயர்ந்தோங்கச் செய்ய உற்றதுணையானது. ஆயினும் இச்சக்தி குறித்துத் தெளிவான சிந்தனைச் சித்திரம் நம்மிடம் இல்லை. வினோபாஜி இந்தக் கோட்பாடு பற்றித் தக்க தத்துவ விசாரணையுடன், நடைமுறை ஞானத்துடன் தனது பல்வேறு சொற்பொழிவுகளில் விரிவாக விளக்கியுள்ளார். அவைகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப் பெற்றுள்ளன. சர்வோதயக் கோட்பாடுகளையும், இயக்கங்களையும் ஓதி உணர, உற்ற வழி செயல்பட இந்நூலைக் கவனமுடன் கற்பது இன்றியமையாதது.