Price: ₹250
Pages: 407
ISBN: ----
இன்று ஏடு தூக்கும் சிறுவர்களே நாளை நாடு காக்கும் நல்ல தலைவர்கள். சிறுவர்கள் இளமையிலிருந்தே நேர்மையாக வளர்க்கப்பட வேண்டும். நல்ல எண்ணமும், நல்ல கருத்துக்களும், சாதனைச் செயல்களுக்கே இட்டுச் செல்லும். இளமைப் பருவமே கதை கேட்பதில் ஆர்வமான பருவம். ஒரு அரிச்சந்திரன் நாடகம் தான் சிறுவன் மோகன்தாஸை மகாத்மாவாக மாற்றியது. சிறுவன் சிவாஜி கேட்ட இதிகாச வீரக் கதைகளே மாவீரனாக சிவாஜியை மாற்றின. நீதிக்க கதைகள் மூலம் சிறுவர்கள் மனதை மாற்ற முடியும்; செம்மைப்படுத்த முடியும். சிந்தனையைத் தூண்ட முடியும். இன்றைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும் தாய்நாட்டைக் காக்கும் எண்ணம் வேண்டும். பெரியோரைப் போற்றும் இதயம் வேண்டும். பெற்றோரையும், ஆசிரியரையும் வணங்கும் மனம் வேண்டும். இச்சிறுவர் சித்திரச் சிறுகதைக் களஞ்சியத்தின் ஐந்து தலைப்புகளில் உள்ள ஐம்பது கதைகளுமே தமக்கென்று ஒரு நீதியை, வாழ்வியல் நியதியை, வழிகாட்டும் நெறியை எடுத்துரைக்கின்றன.