Price: ₹250
Pages: 922
ISBN: 9789382176619
மேல் நாட்டில் யாரேனும் கிருஷ்ணரைப் பற்றி கேள்விப் பட்டதில்லை என்பது ஒரு பெரும் ஆச்சர்யம். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அவரவர் போற்றிப் பேணும் பழங்கதைகளும், வீரதீரர்களும், தேவதூதர்களும், கடவுளரும் உள்ளனர். ஆனால், கிருஷ்ணர் நம் சிற்றறிவுக்குட்பட்ட கலாச்சார வேறுபாடுகளை எல்லாம் கடந்து நிற்பவர், கிருஷ்ணரைப் பற்றிய அறிவு கலாச்சார எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. பரமானது, எல்லாவற்றையும் உள்ளடக்கியது. எல்லாவற்றையும் ஆகர்ஷிக்க வல்லது. கிருஷ்ணர் என்பவர் இந்து சமய வரலாற்றைச் சார்ந்த ஒரு கவி அல்லது மதவாதியின் வளமிக்க கற்பனையில் உதித்த ஒரு தோற்றமல்லர். மாறாக கிருஷ்ணர் பரம சத்தியமானவர், காரணங்களுக்கெல்லாம் காரணமானவர், எல்லாவற்றிலும் மேலாக பரம பொருளான புருஷோத்தமன்.