Price: ₹90
Pages: 192
ISBN: ----
உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்து தான் நாகரீகமாக இருந்தாலும் அல்லது உணவு கலாச்சாரமாக இருந்தாலும் உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப் பெரிய ஆதாரங்கள் உள்ளது. பல்வேறு மூலிகைகள், காய்கனிகள், கீரைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை. உணவே பிரம்மன், உணவிலிருந்தே எல்லா உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு என உபநிடதங்கள் கூறுவதை வள்ளுவரும், ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோரும் கூறியது உணவில்லையேல் வாழ்கையே அழியும் என்பதைத் தான் காட்டியுள்ளது.