Loading…

நினைப்பதும் நடப்பதும் / Ninaipathum Nadapathum

நினைப்பதும் நடப்பதும் / Ninaipathum Nadapathum
Author: சுகி. சிவம் / Suki Sivam

Price: ₹70

Pages: 192

ISBN: ----

நினைப்பதும் நடப்பதும் என்னும் நூல் சுகி.சிவத்தால் சமயச்சீர்திருத்த நோக்கில் எழுதப்பட்ட 40 கட்டுரைகளின் தொகுப்பாகும். “மதத்தின் பெயரால் நடக்கும் மடத்தனத்தை எதிர்க்கிறேன். மதங்களின் பகைமையை எதிர்த்து முடிவுகட்ட நினைக்கிறேன். ‘தமிழ் தெய்வ மொழி அல்ல’ என்பவர்களின் மண்டையில் குட்டி இருக்கிறேன். சமயப் பிரச்சாரம் என்ற பெயரில் உளறுபவர்களை வாய்மூட வைத்திருக்கிறேன். வீட்டில் இருந்து வெளியேறி ஆசிரமங்களுக்குப் போய்விட்டால் ஆன்மிகவாதியாகி விடலாம் என்று ஏமாறுகிற (ஏமாற்றுகிற) அசடுகளை நன்றாக அடையாளம் காட்டி இருக்கிறேன். ‘மதம் வேறு, ஆன்மிகம் வேறு’ என்று ஓங்கி உரைத்திருக்கிறேன். சில நேரம் புரட்சி, சில நேரம் மலர்ச்சி, சில நேரம் வளர்ச்சி, சில நேரம் பயிற்சி என்று புத்தகம் முழுவதும் விதவிதமான விஷயங்களை விதைத்திருக்கிறேன். என் பேனா முனை, ஒரு சிற்பியின் உளிபோல மேலான தனிமனிதனைச் செதுக்கவும் புதியதோர் உலகம் படைக்கவும் எழுதுகிறது என்பதனை என் எல்லாப் புத்தகங்களையும் போல இந்தப் புத்தகமும் நிரூபிக்கும். கருமலை மீது ஜொலிக்கும் கார்த்திகை தீபம் போல காகிதமலை மீது வைத்த கருத்துத் தீபமே இந்நூல்” என இந்நூலைப் பற்றி சுகி.சிவம் அறிமுகம் செய்கிறார்.

Goodreads reviews for நினைப்பதும் நடப்பதும் / Ninaipathum Nadapathum
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads