Price: ₹110
Pages: 131
ISBN: 9788123423104
மனிதன் என்ற சொல் கம்பீரமானது எனக் கருதி மனிதத் தன்மைக்கு உயிரோட்டம் கொடுப்பதையே தமது படைப்பாகக் கொண்டவர் கார்க்கி. விவசாயிகளுடன், தொழிலாளிகளுடன் தனது புரட்சிக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்தார். நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு காஸ்பியன் கடலில் மீன் பிடித்து உணவுக்கு வழி தேடினார். தூக்கத்தையே தொட்டிலாக கொண்டு அநாதையாக அலைந்து திரிந்த அவருடைய சாவில் லட்சம் பேர் கலந்து கொண்டதற்கு காரணம் அவரது எழுத்துகளின் எழுச்சியே. எழுத்துலகில் புரட்சி செய்த கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் அ.சிங்காரவேலு அவர்கள் நிகழ்வுகள் விட்டுப் போகாமல் பெரிதும் முயன்று உருவாக்கித் தந்துள்ளார்.