Price: ₹200
Pages: 368
ISBN: 9788126044597
இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மஹாபாரதம் மேல்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரதக் கதைமாந்தர்கள் புதிய கோணத்தில் விமர்ச்சிக்கப்படுகிறார்கள்.ஒரு பெண் மையமாக இருந்து மகாபாரதக் கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப் போக்கு எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்த நூலின் முறையும், வர்ணனைகளின் திணைக்களமும் வாசகர்களை மிகவும் முனைப்புடன் படிக்கச் செய்வதாக உள்ளன; அங்கங்கே ஒரு குலுக்கு குலுக்கிச் சிந்திக்கச் செய்வதாகவும் உள்ளன. புராணம் சார்ந்த நாவல்களில் தனித்த இடம் பெறத்தக்க சுவையான நூல் இது.