Price: ₹75
Pages: 382
ISBN: 9788178236049
சுவாமி விவேகானந்தரின் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்ய உதவி செய்த அசாதாரணமான மனிதனின் வாழ்க்கைத் தோற்றமே இது. சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாடு ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கும் முன்னதாகவே அமெரிக்காவிற்கு சென்று விட்டதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. சுவாமி விவேகானந்தர்,’பட்டினி கிடக்கிறேன்; பணம் செலவாகிவிட்டது. திரும்பி வருவதற்காவது பணம் அனுப்பு’ என்று 1893 ஆகஸ்ட் 20 அன்று தமது சென்னை இல்லறச் சீடர் அளசிங்கப் பெருமாளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். நிலைமையை சீர்செய்ய மாதம் 70 அல்லது 80 ரூபாய் சம்பளம் மட்டுமே பெற்ற அளசிங்கர், ஒரு வியாபாரியிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். தன் மனைவியின் நகைகளை விற்றார். விரைவுத் தந்தியில் 1100 ரூபாயை சுவாமி விவேகானந்தருக்கு அனுப்பினார். சுவாமிஜியின் இந்த அற்புதமான சீடர்-நண்பரின் சுயசரிதை.