Price: ₹110
Pages: 168
ISBN: ----
இந்நூலைப் படித்த நேரமனைத்தும், ஒரு மெல்லியப் புன்னகை எனது இதழ்களிரண்டிலும். ஒரு சராசரி எட்டு மாதக் குழந்தை போல் தவழ்ந்தது. காரணம், உள்ளடக்கம். நகைச்சுவை என்ற இவரது எழுத்தின் குறிக்கோள், ஆரம்பத்திலேயே அம்பலப்பட்டு சந்தியைச் சிரிக்கவைக்கும் என நம்புகிறேன். சிரிக்கவைத்து, ஏன் சிரித்தோம் என்று சிந்திக்கவும் வைத்தது, 'அட ஆமாம்' இதற்குச் சிரிக்காமல் அழவா செய்வார்கள்? என்று மீண்டும் சிந்திக்க வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இது.