Price: ₹55
Pages: 208
ISBN: ----
வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதோ அல்லது பின்னடைவு என்பதோ அவரவர் மனதிலே உள்ள எண்ணங்களை பொறுத்ததே. வறுமையில் இருந்தாலும் வாழ்வதற்கு வழியே இல்லையென்றாலும் 'நம்மால் முடியுமென்றால்' நிச்சயம் முடியும். அப்போது பல வாய்ப்புகள் நம் கண்ணிற்குத் தெரியும். எண்ணத்தால் தாழ்ந்து போய் 'நம்மால் இவை எல்லாம் முடியாது' என்று முடிவு கட்டிவிட்டால், கடைசி வரையில் முடியாது. ஏன்? எண்ணங்கள் பின்னே செல்கின்ற போது, திறந்து இருக்கின்ற வாய்ப்புகள் கூட மூடிக்கொள்ளும்.