Price: ₹60
Pages: 124
ISBN: ----
தமிழ்ச் சமுதாயத்தின் நல்வினைப் பயன் காரணமாக வரலாற்றுப் பின்னணியை நமக்கு படம் பிடித்துக் காட்டும் சாசனமாக ஒரு காவிய மாளிகையை அமைத்துத் தந்துள்ளார் ஆசிரியர். தமிழன் என்னும் மனவுணர்வை வளர்த்து, சிலப்பதிகாரக் கதை சிறிதளவே கற்பனை தழுவிய வரலாறு ஆகும். காப்பியத் தலைவனும் தலைவியும் தமிழ் இனத்தார் பெருமைப்படத்தக்க வரலாற்று நாயகியும் நாயகனுமாவர். தமிழனத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது சிலப்பதிகாரம். தமிழர்களின் பண்பாடுகளை தெளிவாகக் காட்டும் தமிழ் நூல் சிலப்பதிகாரத்திற்குப் பின்பு தோன்றவில்லை. இது, அந்தப் பெருங்காப்பியத்திற்குரிய தனிப்பெருமையாகும்.