Price: ₹50
Pages: 121
ISBN: ----
பதினேழாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வானில் தோன்றிய ஞானப் பெருஞ்சுடர் குமரகுருபர அடிகள். சைவமும், வையமும் தழைக்க வளமார்ந்த இலக்கியங்களை படைத்தருளியவர்; திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருவருள் பெற்றவர்; தருமை ஆதினம் மாசிலாமணி தேசிகரின் குருவருள் பெற்றவர்; குருவருள் சிறப்பும், திருவருள் பலமும், கவி ஆற்றலும், கற்பனைத் திறமும் ஒருங்கே பெற்றவர்; அவர்தம் தமிழ்ப் பற்றும் தெய்வபக்தியும், சமயத் தொண்டும், சமூகத் தொண்டும் தலைசிறந்தவை.