Price: ₹200
Pages: 223
ISBN: 9788184938357
அரசியல் பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று தொடங்கி தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாகப் பலருடைய உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் வெளியில் வந்த போது, தன் வாழ்வை அடியோடு மாற்றியமைக்கும் ஒரு பெரும் புயலை சங்கர் சந்திக்க நேர்ந்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் அவருடைய அரசுப்பணியைப் பறித்துக்கொண்டதோடு அவரைச் சிறையிலும் தள்ளி, அவர் எதிர்காலத்தையே கேள்விக்குரியதாக்கியது. காவல்துறை தொடங்கி சைபர் கிரைம் பிரிவு முதல் சிபி-சிஐடி வரை ஒரு பெரிய பலமிக்க குழு வேட்டையாட ஆரம்பித்தது. தொடர் வேட்டை, அதிலிருந்து மீள சங்கர் முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டம் இரண்டையும் உணர்வுபூர்வமாக ஆவணப்படுத்துகிறது இந்நூல். ஒரு தனி மனிதனுக்கு எதிராக அரசு இயந்திரம் தொடுத்த போரின் அசாதாரணமான கதை இது.