Price: ₹350
Pages: 464
ISBN: ----
சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும், அதைக்கட்டிய மாமன்னன் உடையார் ஸ்ரீ ராஜ ராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். அடிமனதிலிருந்து காதல் பொங்கும். சோழநாட்டில் பிறந்தவர்களுக்கே என்றில்லை. யாரெல்லாம் சரித்திரத்தின் ரசிகர்களோ அவர்களுக்கெல்லாம் பிரமிப்பு ஊட்டக்கூடிய விஷயம் தான் ஸ்ரீராஜராஜத்தேவரின் சாதனை கோயில் கட்டியது மட்டுமல்ல. அவர் நடத்திய அரசு பற்றியும், அவர் காலம் பற்றியும் மிகத் தெளிவான தகவல்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன.