Price: ₹290
Pages: 368
ISBN: ----
அந்த தேவரடியார் பெண்கள் உரத்த குரலில் சிரித்தது தஞ்சை கடை வீதிகளை உலுக்கிப் போட்டது. எதற்குச் சிரிக்கிறார்கள். ஏன் சிரிக்கிறார்கள் என்று மக்கள் பரபரத்து எட்டிப் பார்த்தார்கள். மக்களுக்கும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று பெரும் போக்காய் போகத் தெரியாமல் இருந்தது. இந்தக் கூடுதலான சப்தத்திற்கும் மக்கள் கூட்டமாய் கூடினார்கள். விவரம் கேட்டார்கள். விவாதித்தார்கள். மக்களின் இந்த பழக்கத்தைப் புரிந்துகொண்ட அந்த இளம் பெண்கள் மக்களைத் தங்கள்பால் கவர உரக்கச் சிரித்தார்கள்.