Price: ₹125
Pages: 216
ISBN: -----
இலக்கியம் சமுதாயத்தை அடித்தளமாக கொண்டது. ஒவ்வொரு சமுதாயமும் தமக்கென்ற சிறப்பியல்புகளை படைக்கின்றது.. அவை தாங்கள் தோன்றிய காலத்தின் முத்திரையைத் தாங்கி நிற்கின்றன. அவற்றுள் பொதிந்து கிடைக்கும் கருத்துக்களில் சில காலமாறுதலால் காலாவதியாகிவிடும்; சில செழுமை பெற்று வளரும். இலக்கிய மரபுகளை மேற்கொண்டு, தேய்ந்து விட்டவற்றை ஒதுக்கிவிட்டு தற்கால இலக்கியத்தை நாம் வளர்த்துச் செல்ல வேண்டும். இக்கட்டுரையில் இலக்கியத்தின் பொருளை முன்னோர் கண்ணோட்டத்திலும் ஆராய்ந்து, 'அறம், பொருள். இன்பம்' ஆகிய மூன்றுமே உள்ளடக்கம் என்று முடிவாகக் கூறுகிறார்கள். வேறு வகையாகக் கூறினால், "வையத்து வாழ்வாங்கு வாழ்தல்" எதுவெனச் சித்தரித்தலே இலக்கியம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.