Price: ₹85
Pages: 192
ISBN: -----
"நலத்துக்குதானேம்மா சொல்றேன்" என்றார் திருமலை. "நலத்துக்குத்தாம்பா. ஆனா... இதெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்" என்றால் ஜெயந்தி. "இதைப் பாரு ஜெயந்தி! இதைவிட நல்ல வசதியான இடம் நமக்கு கிடையாது புரிஞ்சுக்கோ" என்றார் திருமலை. "அப்பா! வசதியான இடம்னாலே கொஞ்சம் யோசிக்கனும்பா.. ஏன் தெரியுமா, நம்ம சக்திக்கு மீறின இடத்தில போய் இறங்கிட்டு நாளைக்கு அதனால வர்ற பிரச்சனைகளைச் சந்திக்கிற நிலைமையில சிக்கிக்க கூடாது" என்றாள் ஜெயந்தி.