Price: ₹150
Pages: 228
ISBN: 9788123420035
தமிழியல் ஆராச்சியில் தெ.பொ.மீ நிகழ்த்திய பண்பாட்டு ஆய்வுகள் மிக முக்கியமானவை. தமிழ் ஆய்வு வரலாற்றில் பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவர். தெ.பொ.மீ 50-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும், 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் ஆகியுள்ளார். அவையே இந்நூலின் அடிப்படைத் தரவுகளாக கொள்ளப்பட்டுள்ளன. உரையாசிரியர் காலம் முதல் தற்காலம் வரை வெளிவந்த தமிழியல் ஆய்வுகள் தரவுகளாக கொள்ளப்பட்டன. இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வின் திசைவழி,செல்நெறி, விரிந்து பரந்த இலக்கியம் மற்றும் மொழி வரலாறு, தெ.பொ.மீ-யின் கல்விச் சிந்தனைகள், கருத்தியல் ஆகியவை பற்றி இந்நூலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.