Price: ₹155
Pages: 328
ISBN: 9788123423173
இலக்கியத்துறையின் உயிர்நாடியாக இலக்கணம் பழங்காலத்தில் கருதப்பெற்றுக் கவனமாகப் போற்றப்பெற்றது. இலக்கியத்தின் புரவடிவமாகிய யாப்பு, அதன் அகவடிவமாகிய பாடுபொருள்(கருத்து), புலப்பாட்டு நெறி எனும் அனைத்து உறுப்புகளுக்கும் இலக்கணம் கூறப்பெற்றது. இவ்விலக்கணத் துறை, இலக்கியத் துறையை உருவாக்குவதற்கும் அதனை வலுப்படுத்தற்குமான சீரிய நெறி என்பதனை தொல்காப்பியம், நன்னூல், அகத்தியம் முதலிய நூல்களின் நூற்பாக்கள் சுட்டிக்காட்டின. மேலும், தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியங்களுக்கும் இடையேயான பிரித்தற்கியலாத உறவும் எதனை வலியுறுத்தும்.