Price: ₹115
Pages: 168
ISBN: -----
ஓங்கியடித்து அந்த தீவில் மழை பெய்தது. மழை மண்ணுக்குள் இறங்கி, வெகு ஆழம் வரை பூமிக்கு அடியில் போயிற்று. இறங்கிய மழை நீர் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தின் உயிர்ச்சாரத்தை கரைத்து, கரைக்கப்பட்ட உயிர்ச்சாரம் வேர்களால் உறிஞ்சப்பட்டது. மெல்ல மெல்ல முன்னேறி அந்த மரத்தின் நடுத்தண்டில் ஒரு சுழியை தாங்கி கொண்டது.