Price: ₹100
Pages: 208
ISBN: -----
அன்புத் தோழி மஞ்சுளாவின் வீட்டிலிருந்து வெளியேறிய கவிதா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள். உடல் தன் போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. உறுதியாகத் தெரிந்துவிட்ட உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறினாள்.