Loading…

மிஸ் ராதா / Miss radha

மிஸ் ராதா / Miss radha
Author: கொத்தமங்கலம் சுப்பு / Kothamangalam suppu

Price: ₹99

Pages: 336

ISBN: 9788189936419

பழமையில் இருந்து, புதுமைக்கு மக்கள் தாவிக் கொண்டிருந்த நேரம். பெண்கள் அடங்கிக் கிடக்கும் காலமாக இருந்த அந்த நேரத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தார்கள் புதுமைப் பெண்கள். இந்த நூலின் நாயகி ராதா அப்படியானவள். கல்லூரிக் காலத்தில் அரும்பும் காதல், மலர் விட்டு மலர் தாவும் வண்டாக மனங்கள், வெளியே தைரியம்... உள்ளே நடுக்கம் என்று அலையும் ஆண்குலம், பணமும் சுற்றமும் இந்த கல்லூரிப் பறவைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாறுதல்கள் என்று மயக்கும் மசாலாக் கலவையோடு நகர்கிறது இந்நாவல். துறுதுறு காதல் சம்பவங்களுக்கிடையே, மர்மமான ஒரு பிளாஷ்பேக் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்படி இறுதிப் பக்கம்வரை நம்மை இழுத்துப் பிடித்துக் கொள்கிற கொத்தமங்கலம் சுப்பு, இன்றைய நடப்புகள் பலவற்றையும் அப்போதே கணித்து ஆச்சர்யமூட்டுகிறார்.

Goodreads reviews for மிஸ் ராதா / Miss radha