Loading…

பணம் பழகலாம் / Panam Pazhagalam

பணம் பழகலாம் / Panam Pazhagalam
Author: சொக்கலிங்கம் பழனியப்பன்

Price: ₹120

Pages: 96

ISBN: 9789388104081

சம்பாதிக்க... சேமிக்க... செலவுக்கு... கடனுக்கு... முதலீட்டுக்கு... என நம்முடன் பணம் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கிறது. ‘இடது கை சேமிப்புக்கு வலது கை செலவுக்கு’ என்பது, பணத்தின் அருமையை விளக்கி நம் முன்னோர்கள் வகுத்துச் சொன்னது. ஆனால், நாம் சம்பாதிக்கும் பணம் தற்போது நம் கைகளில் வருவதில்லை. வங்கிக் கணக்கில் சேமிப்பது இல்லையெனில் செலவழிந்து விடுவதிலேயே பணத்தின் பயன் முடிந்துவிடுகிறது. ஈட்டும் பணத்தை செலவழிக்காமல் அந்தப் பணத்தைக் கொண்டு இன்னும் வருமானம் பெருக்குவதுதான் புத்திசாலித்தனம். அந்த நுணுக்கங்களைச் சொல்கிறது இந்த நூல். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய சேமிப்பு முறைகள் என்னென்ன.. மாதாந்திர வருமானத்துக்கு பென்ஷன் பெற கணக்கு தொடங்கும் முறை.. குழந்தை களுக்கு பாக்கெட் மணியின் அவசியம்... என அவசியமான பல தகவல்களை அளித்திருக்கிறார் நூலாசிரியர்.

Goodreads reviews for பணம் பழகலாம் / Panam Pazhagalam