Loading…

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) / Aiyam Pokkum Anmigam - 2

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) / Aiyam Pokkum Anmigam - 2
Author: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Price: ₹105

Pages: 191

ISBN: 9788184760538

சந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது என்றாலும், ஆன்மிகம் என்று வரும்போது அந்தக் கேள்விகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. உதாரணமாக, உபன்யாசங்களுக்குச் சென்று வீடு திரும்பும்போது மனதில் எழும் சந்தேகங்கள் நிறைய. ஆன்மிகம் மற்றும் வேதாந்தம் தொடர்பான நூல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஏன்? எப்படி? என்ற கேள்விகள் நம்மைத் துளைத்தெடுக்கின்றன. அவ்வளவு ஏன்? வீட்டில் விசேஷ நாட்களில் பூஜை நடக்கும்போது பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் குறித்துதான் நமக்கு எத்தனை கேள்விகள் தோன்றுகின்றன.

Goodreads reviews for ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) / Aiyam Pokkum Anmigam - 2