Loading…

கான் சாகிப் / Khan Sahib

கான் சாகிப் / Khan Sahib
Author: Nanchil Nadan / நாஞ்சில் நாடன்

Price: ₹170

Pages: 192

ISBN: -----

இரண்டாயிரத்து எட்டு ஜனவரி முதல் எழுதப்பட்ட பதினேழு கதைகள் இவை. இத்துடன் என் சிக்கதையின் எண்ணிக்கை நுற்றுப் பன்னிரண்டு.நூற்றைம்பதைத் தொட்டதும் ஒய்வு பெற்றுவிடலாமா எனும் கேள்வி பிறக்கையில், ஈதென்ன கிரிக்கெட் சாதனைப் பாட்டியலா எனும் பக்கக்கேள்வியும் கிளைகிறது. 1975-ல் தொடங்கிய என் கதை முப்பத்தைந்து ஆண்டுகளில் வெகுவாக மாறி வந்திருப்பதைத் தொடர்ந்து வாசிக்கும் எவரும் உணரலாம். சிலசமயம் தோன்றும் இது எனது இழப்பா, மீட்டெடுக்க வேண்டுமா,இல்லை இதுவே என் இயல்பான போக்கு எனத் தொடர்ந்து போகவா என.தள்ளி நின்று உற்று நோக்கி வாட்டம் திருத்தும் சங்கதியா இது என்ற கேள்வியும் உண்டு. முப்பது வயதின் மொழி நடை அறுபது வயதிலும் சாத்தியமா என்ன?

Goodreads reviews for கான் சாகிப் / Khan Sahib
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads