Loading…

வாக்காளனாகிய நான் / Vakkalanakiya naan

வாக்காளனாகிய நான் / Vakkalanakiya naan
Author: மானசீகன் / maanasikan

Price: ₹170

Pages: 192

ISBN: -----

காந்திக்குப் பிறகு மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் இருவர்: ஒருவர் நேரு இனொருவர் படேல்.படேலை மோடி கொண்டாடுகிறார் என்பதற்காக அவரை முழுமையாக அவர்களின் ஆளாக நான் மதிப்பிடத் தயாரில்லை. ஆயிரம் இருந்தாலும் அவர் காங்கிரஸ்காரர்; காந்தியின் சீடர். அவருடைய சில நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உரியதுதான். வரலாற்றில் எல்லோரையுமே அவர்களுக்கான குறைகளோடு தான் கொண்டாட முடியும்.அவருக்கிருந்த இந்துத்துவ சார்பை, திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டாலும் கூட வன்னிய சமூகத்தில் பிறந்த ஒருவருக்கு ராமதாஸின் மீது உள்ளூர இருக்கும் பாசமாக மட்டுமே புரிந்துகொள்கிறேன். இது அவரவர் தம் அகத்தில் சுய பரிசோதனை செய்து பார்த்தா பிறகு முடிவு செய்ய வேண்டிய சிக்கலான விஷயம் ஒரு இஸ்லாமியனாக,முற்போக்காளனாக எனக்கு, நேருவோடு ஒப்பிடும்போது படேல் மீது கோபம் வரலாம்.ஆனால் அவர் அவருக்கான நியாயங்களோடுதான் இருக்க முடியும். பெரும்பான்மை வாதத்தின் இயல்பு அது, அவருடைய வேறு பல நடவடிக்கைகளுக்காக அவரை நாம் காந்தியின் சீடனாகவே உணர்கிறேன்.வலிந்து அந்த ஆளுமையை எதித்திசைக்குத் தள்ளிவிட நான் தயாரில்லை ஆம்; நான் பதிலையும் கொண்டாடுகிறவன்தான்

Goodreads reviews for வாக்காளனாகிய நான் / Vakkalanakiya naan
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads